தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விண்ணை தொடும் பூக்களின் விலைகள்
நாளை தினம் சித்திரை விசு, தமிழ் வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்து காணபடுகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நெல்லை பூ சந்தைகளில் பூக்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில் நாளை தினம் சித்திரை விசு, தமிழ் வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்து காணபடுகிறது.
மல்லிகை பூ நேற்றைய தினம் ஒரு கிலோ ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் கிலோ ரூபாய் 700 முதல் 800 வரையிலும் விற்கப்படுகிறது. பிச்சிப்பூ ஒரு கிலோ நேற்றைய தினம் 1000 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ரூபாய் 1500க்கு விற்பனையாகிறது.
மேலும் படிக்க | தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அதேபோல் ஒருகிலோ கேந்தி பூ 80 ரூபாய்க்கும், சேவல் கொண்டை 60 ரூபாய்க்கும், அரளி பூ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது கனகாம்பரம் ஒரு கிலோ 600 க்கும் சம்பங்கி ரூபாய் 200 க்கும் நாட்டு சம்பங்கி ரூபாய் 300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ 80 க்கும் பட்ரோஸ் ஒரு கிலோ ரூபாய் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை கால வழிபாடு நடத்துவதற்காக பொதுமக்கள் காலை முதலே நெல்லை சந்திப்பு மலர் சந்தையில் பூக்களை வாங்க அதிகமான அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR