ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கருத்தில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் இவர்களுக்குத் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும் எனக் கூறியிருந்தார்.


இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், இரட்டை இலைச்’சின்னம்’பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டுள்ளார்.