ஊரெல்லாம் விக்குது மதுபானம், ஆனால் டெண்டரை காணோம் - பார் உரிமையாளர்கள் புலம்பல்
டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு உள்ளதாக டாஸ்மார்க் உரிமையாளர்கள் சங்கம் புகார்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் டாஸ்மார்க் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பார் உரிமம் புதுப்பித்தல், புதிதாக பார் எடுப்பதற்கான டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் டெண்டர் விடுவதற்கான விண்ணப்பம் 2 ஆம்தேதி ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைனில் இதுவரை விண்ணப்ப படிவம் ஏதும் வரவில்லை என்பதால் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மார்க் சங்க உரிமையாளர்கள் செம்பரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மார்க் குடோனுக்கு வந்து அதிகாரியிடம் விண்ணப்ப படிவம் குறித்து கேட்டபோது அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர்.
மேலும் டென்டர் விண்ணப்பம் பெறுவதற்கு நீங்கள் துறை சார்ந்த அமைச்சரை சென்று பார்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறபடுகிறது. இது குறித்து பார் உரிமையாளர் சங்க தலைவர் அன்பரசு கூறியதாவது, தொடர்ந்து டாஸ்மார்க் பார் டென்டரில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், தற்போது விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு கூட துறை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கும்படி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 5ஜி ஏலத்தில் ஊழலா?... அண்ணாமலை சொல்வது என்ன
மேலும் பார் டென்டர் எடுப்பதில் அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகின்றனர். மேலும் பார் டென்டர் எடுப்பதில் ஓரு தலை பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,தொடர்ந்து இதேபோல் அமைச்சரின் தலையீடு தொடர்ந்தால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | கோவை 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - மேலும் இருவர் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ