கோவை 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - மேலும் இருவர் கைது!

கோவையில் 12 ம் வகுப்பு  மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மேலும் இருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 4, 2022, 08:14 PM IST
  • மாணவி கடிதத்தில் எழுதி வைத்திருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
  • இதில் கைதான சுல்த்தான் பெரிய பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தவர்.
கோவை 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - மேலும் இருவர் கைது! title=

கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த  பள்ளியின்  இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

மேலும் இந்த விவகாரம் குறித்து தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி கொடுத்த  பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் , தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. 

மேலும் படிக்க | ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம்

அந்த கடிதத்தில் சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்களையும் விடக்கூடாது என எழுதி இருந்தார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மாணவி கடிதத்தில் எழுதி வைத்திருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவர் மாணவியின் வீட்டில் அருகில் வசித்த சுல்தான் என்பதும், மற்றொருவர் மாணவியின் உடன் படித்த சக மாணவியின் தந்தை  மோகன்ராஜ் என்பதும் இவர்கள் இருவரும் மாணவியை பாலியல் சீண்டல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் கைதான சுல்த்தான் பெரிய பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | சசிகலாவுக்கு நிவாரணம்: வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News