வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் ஆங்காங்கே பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்காதது, தமிழக முழுவதும் நடைபெறும் லாக்கப் மரணங்களை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்காதது உள்ளிட்டவைகளைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழர்களை பிரிக்கும் சக்திகள் அதிகமாகி இருக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.



இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே பி ராமலிங்கம், திமுக மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அது இதுதான்.!


1. திமுக அரசு தமிழக மக்களின் நலனின் அக்கறை கொண்டுவளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லை 


2. குடும்பத்திற்கு தேவையான திட்டத்தினை மட்டுமே செயல்படுத்தி திமுக ஆட்சி செய்து வருகிறது 


3. சேலம் மாநகராட்சி உள்ளாட்சி நிர்வாகத்தில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் செய்து தரப்படவில்லை 


4. மத்திய அரசு நிதியில்தான் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது


5. மத்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கு நிதியை வழங்குகிறது. அதனைப் பெற்றுக்கொண்டு திமுக நிதி வழங்கியது போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிக்கொள்கிறது. 


6. தமிழகம் போதை சந்தையாக மாறிவருகிறது. சர்வ சாதாரணமாக போதைப் பொருள் கிடைக்கிறது. டாஸ்மார்க் கடைகளில் அதிக அளவு திமுகவினர் மற்றும் கவுன்சிலர்கள்தான் விற்பனை செய்கின்றனர்.


மேலும் படிக்க | 55 ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு எதற்கு விளம்பரம் - ஸ்டாலினின் அசத்தல் பேச்சு


7. வீட்டிலேயே சந்துக் கடை வைத்து மது பாட்டில்களை திமுகவினர் விற்பனை செய்து வருகின்றனர். 


8. சமூக நீதி காவலர் என்று தன்னை பெருமைப்படுத்தி கொள்ளும் மு.க.ஸ்டாலின், மலைவாழ் இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தராமல், மேட்டுக்குடி வேட்பாளருக்கு ஆதரவு தருவது ஏன் ?


9. திமுக அரசு நீண்ட காலம் நீடிக்காது!



இந்த உண்ணாவிரதத்தில் சேலம் மாவட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR