கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறப்பட்ட சூழலில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாய் சந்தேகம் கிளப்பினார். மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறி அதிர்ச்சி கிளப்பினார். இதனையடுத்து மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தப் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. அந்தக் கலவரத்தின்போது பள்ளிக்குள் சென்ற சிலர் பள்ளி வாகனங்களையும், சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் மேஜைகளையும், நாற்காலிகளையும் தூக்கி சென்றனர். இதற்கிடையே நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடும் நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது?


இந்நிலையில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று கூட்டம் நடத்தியது. இதனையடுத்து கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், “மாணவர்கள் பள்ளி சொத்துக்களை சேதமடையச் செய்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ ஏற்க வேண்டும். அந்த சொத்துக்களை மாற்றி அமைத்து தரக்கூடிய பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும். 


பள்ளிகளில் மாணவர்கள் புகைப் பிடிப்பது, பிற மாணவர்களை அடிப்பது, கேலி செய்வது, ஆசிரியர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வது என பலவிதமான தவறுகளை செய்கிறார்கள். அந்த மாணவர்களை திருந்த செய்வதற்கும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.


மேலும் படிக்க | விவசாயிகள் விஷயத்தில் தமிழக அரசின் செயல் ஏமாற்றம் கொடுக்கிறது - வேல்முருகன் காட்டம்


மேலும் படிக்க | College Student Death: கட்டணம் கட்ட முடியாத நெல்லை களக்காடு கல்லூரி மாணவி தற்கொலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ