2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலம் என கூறப்படுபவர் டிடிஎஃப் வாசன். யூட்யூபரான இவர் கோவையை சேர்ந்தவர். தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவருக்கு 27 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏராளமான யூட்யூபர்கள் இருந்தாலும் இவருக்கு 2k கிட்ஸில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா பிரபலத்துக்கு இணையாக இவரை காண கூட்டம் கூடுகிறது. அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமைந் அடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வாசனுக்கு வாழ்த்து கூறி பல பரிசு பொருள்களை அளித்தனர்.



இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க டிடிஎஃப் வாசனின் வாசமே அடித்தது. அதேசமயம், டிடிஎஃப் வாசன் அளவுக்கு அதிகமாக வேகத்துடன் வண்டி ஓட்டுவதாகவும், இது சிறுவர்களை தவறாக வழிநடத்துமென்றும் பேச்சு எழுந்தது.


மேலும், அவர் 240 கி.மீட்டரில் பைக் ஓட்டிய புகைப்படத்தையும் சிலர் பகிர்ந்து ட்விட்டர் மூலம் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனால் வாசன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.



இந்நிலையில் வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கடந்த சில நாள்களாக என்னை பற்ற எதிர்மறையாக பேசுகிறார்கள். என்ன நடக்கிறதென்று தெரியவில்லை.


 



பைக்கை வேகமாக ஓட்டுங்கள் என்று நான் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை. ஒருவேளை அவ்வாறு நான் ஊக்கப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.


மேலும் படிக்க | ஜீ நியூஸ் தொகுப்பாளரை கைது செய்ய முயன்ற சத்தீஸ்கர் காவல்துறை: காரணம் என்ன


240 கி.மீ வேகத்தில் சென்றது பைக்கின் செயல்திறனை சோதிப்பதற்காக மட்டும்தான். ஆனால் சில செய்தி சேனல்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர்” என்று கூறியிருக்கிறார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR