ஜீ நியூஸ் தொகுப்பாளரை கைது செய்ய முயன்ற சத்தீஸ்கர் காவல்துறை: காரணம் என்ன

Zee News Anchor Rohit Ranjan: ஜீ நியூஸ் தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சனை உத்தரபிரதேச காவல்துறைக்கும் தெரிவிக்காமல் சத்தீஸ்கர் போலீசார் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) கைது செய்ய முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2022, 12:53 PM IST
  • ஜீ நியூஸ் தொகுப்பாளரை கைது செய்ய முயன்ற சத்தீஸ்கர் காவல்துறை.
  • இது குறித்து உத்தரபிரதேச காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதா?
  • ரோஹித் ரஞ்சன் இது குறித்து சமூக ஊடகங்களில் இந்தியில் ட்வீட் செய்தார்.
ஜீ நியூஸ் தொகுப்பாளரை கைது செய்ய முயன்ற சத்தீஸ்கர் காவல்துறை: காரணம் என்ன title=

புதுடெல்லி: ஜீ நியூஸ் தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சனை உத்தரபிரதேச காவல்துறைக்கும் தெரிவிக்காமல் சத்தீஸ்கர் போலீசார் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) கைது செய்ய முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் ரோஹித் ரஞ்சன். சத்தீஸ்கர் போலீசார் அதிகாலை 5.30 மணியளவில் ரோஹித்தின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அறிக்கைகளின்படி, சத்தீஸ்கர் காவல்துறையின் 15 போலீசார் ரோஹித் வசிக்கும் சொசைடிக்கு சென்றனர். அங்கு காவலில் இருந்த காவலர்களின் மொபைல் போன்களையும் அவர்கள் பறித்ததாக கூறப்படுகிறது. 

ரோஹித் ரஞ்சன் இது குறித்து சமூக ஊடகங்களில் இந்தியில் ட்வீட் செய்தார். "உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் என்னைக் கைது செய்ய சத்தீஸ்கர் காவல்துறை என் வீட்டிற்கு வெளியே நிற்கிறது. இது சட்டப்படி சரியானதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | Income Tax Raid: காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்ட்: பல இடங்களில் வருமான வரி சோதனை

அவரது ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, காசியாபாத் காவல்துறை, 'இது உள்ளூர் காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.  இந்திராபுரம் காவல் நிலைய அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்துள்ளனர். விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்தது.

ரோஹித் ரஞ்சன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக அவரை கைது செய்வதற்காக சத்தீஸ்கர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றதாக ஏஎன்ஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அவர் முன்பு ராகுல் காந்தியின் வீடியோ அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டினார். பின்னர் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தன்னைத் திருத்திக் கொண்டார்." என கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உள்ளூர் காவல்துறையினரின் கவனத்தில் இருப்பதாகவும், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காசியாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த முழுச் சம்பவமும் சத்தீஸ்கர் காவல்துறையின் பணிபுரியும் பாணி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அடையாள அட்டையைக் காட்டாமல் சிவில் உடையில் ரோஹித்தின் வீட்டிற்குள் காவல் துறை அதிகாரிகள் நுழைந்ததன் காரணம் என்ன என்ற கேள்வி உள்ளது. 

மேலும் படிக்க | ஆந்திரா: பிரதமர் சென்ற ஹெலிகாப்டர் அருகே பறந்த பலூன்களால் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News