சாத்தான்குளம் வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும்; தமிழக முதல்வர் உறுதி...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) இறப்பு வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) இறப்பு வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை காவலில் மிருகத்தனமான சித்தரவதைக்கு பின்னர் இறந்ததாக கூறப்படும் தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இறப்பு வழக்கு CBI விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், தந்தையும் மகனும் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பெரும் சீற்றத்தைத் தூண்டியது.
READ | போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு DMK சார்பில் 25 லட்சம் நிதியுதவி!!
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான CBI விசாரணை குறித்து அறிவித்த முதல்வர்., "CBI விசாரணை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த வழக்கை CBI-க்கு ஒப்படைப்போம். அடுத்த விசாரணையின்போது இதைச் செய்வோம். தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனி கவனத்துடன் வழக்கை விசாரித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் தூத்துக்குடி சாத்தான்குளத்தை சேர்ந்த இருவரது பெயர்கள் சமூக ஊடகங்களில் பரவலாக அடிப்பட்டது. அதாவது காவலத்துறை சித்திரவதை அடுத்து இறந்ததாக கூறப்படும் இந்த இருவரின் மரணம் சமூக ஊடகங்களில் கடும் கோபத்தைத் தூண்டியது, இந்த சம்பவத்தை அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துடன் பலர் ஒப்பிட்டனர்.
கொரோனா முழு அடைப்பின் போது அனுமதிக்கப்பட்ட காலத்தை கடந்தும் தங்களது கடையை திறந்து வைத்திருந்ததாக ஜே.ஜெயராஜ்(வயது 59) மற்றும் பெனிக்ஸ் இம்மானுவேல்(வயது 31) ஆகியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையின் போது காவல்துறை இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக இருவருக்கும் மலக்குடல் இரத்தப்போக்கு மற்றும் இறுதியில் மரணம் ஏற்பட்டது என்று ஜெயராஜின் மனைவி ஜே.செல்வரணி அரசு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முயல்கிறது.
READ | பாதுகாவலர்கள் ஒடுக்கு முறையாளர்களாக மாறுவது கொடூரமான குற்றம்: நீதி வேண்டும் ராகுல்...
தெற்கு தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடி நகரிலிருந்து 50 கி.மீ தெற்கே அமைந்துள்ள சாத்தான்குளத்தில் உள்ள காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கை(FIR)-ல் கொரோனா வைரஸ் பூட்டுதல் விதிகளை மீறியதற்காக ஜூன் 19 வெள்ளிக்கிழமை ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸை அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
பின்னர் மூச்சுத் திணறல் புகார் காரணமாக பெனிக்ஸ் திங்கள்கிழமை இறந்தார், மற்றும் ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை இறந்தார் என்று காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் காவல்துறையின் கொடுமையான சித்திரவையால் மட்டுமே தன் மகன் மற்றும் கணவர் இறந்ததாக வலியுறுத்தி வருகிறார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என திமுக உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.