தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் பல வருடங்களாக இருந்து வருகிறார்.  கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை மாற்றி பீலா ராஜேசை அந்த இடத்தில் அமர வைத்தனர், சிறிது காலம் சுகாதாரத் துறையின் செயலாளராக இருந்தார்.  பின்பு அவர் மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணனுக்கு அந்த பதவியை வழங்கப்பட்டது.  2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு திமுக அரசு புதிதாக பதவியேற்றது.  இருப்பினும் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காமகராசர் பல்கலைக்கழகத்தில் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு.... ராமதாஸ் கடும் கண்டனம்


கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிகளை செய்தார் என்று பொது மக்கள் இடத்திலும் இவருக்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது.  தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது, இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இன்னும் கொரோனா அலை முழுவதும் ஓயாத பட்சத்தில் சுகாதாரதுறை செயலாளர் மாற்றப்பட்டதால் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க | திமுக அரசை வசமாக ஏமாற்றிய அதிமுக நிர்வாகி! இடையில் ஒரு வங்கிமோசடி


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR