‘ஐ.டி. துறையில் ஆட்குறைப்பை தவிருங்கள்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல் தொழில்நுட்பம் குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் மற்றும் 2 நாள் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறுகையில்; கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தகவல் தொழில் நுட்ப துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது முற்றிலுமாக தடுக்க வேண்டும். அவ்வாறு ஆள்குறைப்பு நடவடிக்கையை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும், 6 லட்சம் வேலைவாய்ப்புகளை தகவல் தொழிநுட்பத் துறையில் உருவாக்கியுள்ளோம்.


தமிழகத்தில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது. மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும். கிராமபுற மக்களுக்கு இணையதள வசதி திட்டம் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வராமல் மக்களைத் தேடி அரசு செல்லும் கனவு நிறைவேறுகிறது எனவும் கூறியுள்ளார். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய முன்வரும் தொழிற்துறையினருக்கு நன்றி. முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி அழைக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது என்றார். புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தமிழகம் முதலிடமாக திகழ்கிறது. மிகப்பெரிய நிறுவனங்களின் கிளைகளும் சென்னையில் உள்ளன. 


மேலும், காக்னிசென்ட், இன்போசிஸ் உள்ளிட்ட ஐ.டி. துறையில் ஆட்குறைப்பை தவிர்க்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.