காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுகவுடையதா?... துரைமுருகன் அளிக்கும் விளக்கம்
காவிரி - குண்டாறு இணைத் திட்டம் ஒன்றும் அதிமுக திட்டம் இல்லை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழ்நாடு நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும்.
மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் மற்ற மாநிலங்களிலும் தாமதமாக நடைபெற்று வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம்.
மேலும் படிக்க | வானத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள் அண்ணாமலை - கமலுக்காக கோதாவில் இறங்கிய சினேகன்
தமிழ்நாட்டில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால், வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்ந்த தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்” என்றார்.
மேலும் படிக்க | தரம் மற்றும் பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்த KFC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ