Army Soldier Viral Video: தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் தனது மனைவியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சுமார் 120 ஆண்கள் அவரது மனைவியை அவரது கடையில் தாக்கியதாகவும், அவரை அரை நிர்வாணமாக்கி அடித்ததாகவும் ராணுவ வீரர் பிரபாகரன் அந்த வீடியோவில் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை போலீசார் குற்றச்சாட்டை நிராகரித்ததாக கூறப்படுகிறது. வீடியோவில் கூறப்பட்ட கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் கூறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. "இது ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கடையில் தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணும் அவரது தாயும் அந்த இடத்தில் இருந்தனர். ஆனால் அந்த பெண் தாக்கப்படவில்லை" என்று வைரல் வீடியோ குறித்து எஸ்பி கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.



மேலும் படிக்க | 'முதலமைச்சரே காதை கூர்மையாக்கி கேளுங்க' - திட்டங்களின் பட்டியலை அடுக்கிய அமித்ஷா!


ராணுவ வீரர் பிரபாகரன் தனது மனைவி தாக்கப்பட்டதாகக் கூறும் வீடியோவை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் என் தியாகராஜன் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த ட்விட்டர் பதிவில்,"ஒரு ராணுவ வீரர் நாட்டைக் காக்க வெளியேறும்போது, ராணுவ வீரரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக உயர்ந்த பொறுப்பாகும். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது சட்டவிரோத நிலையை காட்டுகிறது" என்று குறிப்பிட்டார்.


இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வீடியோவில் பேசிய ராணுவ வீரர் பிரபாகரனிடம் தொடர்புகொண்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கும் அவரது மனைவிக்கும் ஆதரவை உறுதி செய்ததாகக் கூறினார். "ராணுவ வீரரின் மனைவிக்கு நம் தமிழ் மண்ணில் இப்படி நடந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்!" என்று பாஜக மாநிலத் தலைவர் ட்விட்டரில் எழுதியுள்ளார். 



"திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீரில் நம் நாட்டிற்கு துணிச்சலாக சேவை செய்யும் ராணுவ வீரரிடமும், அவரது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடினேன். வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரைப் பரிசோதிக்க செல்வோம். ராணுவ வீரருக்கும், அவரது குடும்பத்துக்கும் தமிழ்நாடு பாஜக துணை நிற்கும்" என்று அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | தமிழை தப்பாக பேசும் முதல்வர் தமிழை வளர்க்கப் போவதாக சொல்வது கேலிக்குரியது-நடிகை குஷ்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ