ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 


இந்நிகழ்வின் போது அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், MR விஜயபாஸ்கர்,  KC கருப்பணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.


அதன் பின்னர், பவானி ஆறு பாயும் பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார். மேலும் பவானி சந்தைப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்வின் போது பொதுமக்களிடன் குறைகளை கேட்டறிந்த அவர் அங்கு பெண் குழந்தை ஒன்றுக்கு நந்தினி என பெயர் சூட்டினார். அதேபோல், மற்றொரு குழந்தைக்கும் பெயர் சூட்டினார்.


ஈரோட்டில் ஆய்வை முடித்து பின் நாமக்கல் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குமாரபாளையத்தில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போடு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரும் உடனிருந்தனர்.