சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியல், மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது கிடங்கிலும், டாஸ்மாக் (Tasmac) கடைகளில் 90 நாட்களுக்கு மேல் மது வகைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து வகை மதுபானங்களையும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் மதுபானங்கள் (Liquor Shops) கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன்படி மதுவகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 


ALSO READ | தமிழ் ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கின்றன​


மதுபானக் கடைகளை மாவட்ட மேலாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கடைகளை திறப்பதற்கு முன்பு மேலாளர்கள் உட்பட ஊழியர்கள் யார் யார் டாஸ்மாக் கடைகளில் உள்ளனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூல  அனுப்ப வேண்டும். மதுக்கடைகளில் வெளிநபர்கள் இருக்கக்கூடாது. மேலும் ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்க கூடாது. கடைக்கு பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மாவட்ட மேலாளர்களால் முடியாத கோரிக்கையை முதுநிலை மண்டல மேலாளர்கள் தொழிற்சங்கங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களாலும் நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்றால் மட்டுமே மேலாண்மை இயக்குனரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.


ALSO READ | Tasmac Shop: இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR