மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (High Court Madurai Bench) மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா (Coronavirus) பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட அம்மாநில கலால்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா 2-வது அலையில் பாதிப்பு தினமும் புதிய சாதனை படைத்து வருகிறது. கொரோனா (COVID-19) பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்ததை அடுத்து, அதை மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது.


ALSO READ |  புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட அரசு உத்தரவு!


தமிழ்நாட்டில் கோவிட் தொற்று எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மால்கள், உணவகங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள், அதில் இடம்பெற்றிருந்த அனைத்து தனியார் பார்களும் திங்கள்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது.


எஃப்.எல் 2 உரிமம் வைத்திருக்கும் அனைத்து கிளப்கள் மற்றும் எஃப்.எல் 3 உரிமங்களைக் கொண்ட ஹோட்டல் பார்கள் திங்கள்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (District Collector) உத்தரவிட்டுள்ளார். 


மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து டாஸ்மாக் (Tasmac Shops) மதுபான விற்பனை நிலையங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.


ALSO READ |  மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR