புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்ததரராஜன் புதுச்சேரி முதல்வருக்கும் தனக்கும் உள்ள பிரச்சனை அண்ணன்-தங்கை சண்டை போன்றது என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவில் திருவிழா…


நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனித் திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்ச்சி நடைப்பெற்றுது. இதில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லைக்கு வந்திருந்தார். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதி சுவாமி நெல்லையப்பர் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் உள்ள பல்வேறு சன்னதிகளில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்களோடு கூட்டமாக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும், கொரோனா என்ற பெரும் பேரிடர் மக்களிடம் இருந்து அகற்றப்படுவதற்கு பெரு ஆயுதமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் கூறினார். 


மேலும் படிக்க | சிதம்பரம் கோயில் விவகாரத்தில் பக்தர்களுக்கு அரசு ஆதரவு - அமைச்சர் சேகர் பாபு


“அண்ணன்-தங்கை சண்டை போன்றது…”


தமிழிசை சவுந்ததராஜன் தனக்கும் புதுச்சேரி முதலமைச்சருக்குமான பிரச்சனை குறித்து பேசினார். அப்போது, “பாண்டிச்சேரி  முதலமைச்சருக்கும் ஆளுநர்க்கும் இடையே மோதல் எதுவும் இல்லை எங்கள் இருவருக்குமான பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான்” என்று கூறினார். மோலும் பேசிய அவர், பாண்டிச்சேரிக்கு கடந்த ஆண்டுகளை விட 2000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆண்டுகளுக்கு பிறகு பாண்டிச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது 65,000 பெண்களுக்கு பாண்டிச்சேரி மாநிலத்தில் மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறவதாகவும் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், “இந்த திட்டம் தமிழகத்தில் வரும் அறிவிப்பாகவே உள்ளது. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் பேசியிருக்கலாம் நீதிமன்றத்தில் பணி நியமான ஆணை தொடர்பாக தடை ஆணைகளும் வழிகாட்டுதல்களும் உள்ள காரணத்தினால் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாத சூழல் இருந்து வருகிறது” என்று தெரிவித்தார். இதுமட்டுமன்றி மாநிலத்தில் நடைப்பெற்று வரும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசினார். 


“பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன்…”


அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகளை விரைவாக பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது பாரத பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என சொல்லி இருந்தார் நான் அதை ஃபாஸ்ட் புதுச்சேரியாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான் பக்தையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும்போது கூட பூஜைகள் நடக்கிறது என்று சொல்லி சுவாமி தரிசனம் செய்வதில் சில பிரச்சனைகள் இருந்தது. 


தீக்ஷிதர்கள் பிரச்சனை குறித்து தமிழிசை…


தமிழிசை சவுந்தரராஜனின் பேட்டி தொடர்ச்சி..


அரசும் தீக்ஷதர்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் நடராஜர் அனைவருக்கும் பொதுவானவர் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட்டை ஏவுதலத்தின் மூலம் 10 முதல் 15 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளராக தான் போட்டியிட்டபோது தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் கொண்டு வருவேன் என அறிவித்தேன். அதனை பலரும் கேலி கிண்டல் செய்த தற்போது ஒரே நாளில் ஐந்து வெந்தய பாடத் தொழில்கள் இயக்கப்பட்டுள்ளது. 


“இந்தியாவின் நிலை மாறி வருகிறது..”


தமிழிசை சவுந்தரராஜனின் பேட்டி தொடர்ச்சி..


தென் தமிழகத்தில் இருந்தும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 86,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இளைஞர்கள் வேலை கொடுக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர் இந்திய பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் டாலருக்கு 2025-ல் உயரும் என உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருந்த நிலை மாறி இந்தியாவை மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் நிலை உருவாகி வருகிறது என தமிழிசை சவுந்ததராஜன் தெரிவித்தார். 


மேலும் படிக்க | உரிமைக்கு குரல் கொடுங்கள்! தோள் கொடுங்கள்: மூன்றாம் பாலினத்தவர்களின் கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ