மதுரை: தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீரென பாதுகாப்பு காரணம் கருதி  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு ஜல்லிக்கட்டு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர், போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வாடிவாசலில் களம் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் வந்த நிலையில் போட்டி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கிராம மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று நடத்த தமிழக அரசு, அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தை பார்வையிட்ட போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைத்தனர்.


மேலும் படிக்க | ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி ஆபத்தாகும் ? உச்சநீதிமன்றம் கேள்வி


மாற்று தேதியில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ள அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் கிராம மக்களும் போட்டி நடத்த வேண்டும் என்று கூறி வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர். நள்ளிரவில் கந்தர்வக்கோட்டை செங்கிப்பட்டி சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகப்படியான வாடிவாசல் உள்ளது. அதேபோல் இங்கு தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 2ம் தேதி போட்டி நடத்த, ஜல்லிக்கட்டு போட்டி  நடத்தும் விழா குழுவினர் அனுமதி கேட்டிருந்தனர்.


 


ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கிடைக்காததால் ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் இன்று 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்துவதற்குக் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த  மக்களும், விழாக் குழுவினரும் உற்சாகத்துடன் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினார்கள்.


மேலும் படிக்க | Xiaomi இணையதளத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் SuperNote!


ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து பணிகளும் அங்கு முடிவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் தச்சங்குறிச்சிக்கு வந்து இறங்கியது.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் மாடுகள் வெளியே வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட் முறையாக அமைக்கவில்லை தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த வேண்டும் அப்படி நடத்தினால்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு தடையின்றி பாதுகாப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | வல்வினைகளைப் போக்கும் சிதம்பரம் நடராஜர் தரிசனம்


எனவே அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று கூறி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைப்பதாகவும் பணி முடித்த பிறகு ஜல்லிக்கட்டு குழுவினர் எந்த தேதியில் அனுமதி கேட்கின்றார்களோ அந்த தேதியில் அனுமதி வழங்கப்படும் என்று கூறி ஜல்லிக்கட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


ஜல்லிக்கட்டு போட்டியை இன்றே நடத்த வேண்டும் என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுபவர்களிடம் போலீசாரும் வருவாய் துறையினரும்  பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னரும் நள்ளிரவு 1:40 மணி வரை போராட்டம் தொடர்ந்தது.


இறுதியில், போலீசாரின் சமாதானத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இருந்தாலும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தச்சங்குறிச்சி கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 


மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ