சென்னை: தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகத்தை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பு, ஆக்சன், டயலாக் டெலிவரி, நடனம் போன்றவற்றால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு உள்ளார். விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். இது பெரும்பாலும் பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ள நிலையில், நடப்பாண்டு முதல் ஒரு புது முயற்சியை விஜய் மக்கள் இயக்கம் கையில் எடுத்து உள்ளது.



அந்தவகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் நூலகம்” இன்று தமிழ்நாடு முழுவதும் 21க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த நூலகத்தைத் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து துவக்கி வைத்தார்


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தளபதி மக்கள் இயக்கம் விஜய் சொல்லிக்கிணங்க விலை இல்லா விருந்தகம், விலை இல்லா ரொட்டி பால் திட்டம், தளபதி  பயிலகம் குருதியகம் விழியகம் சட்ட ஆலோசனை மையம் என பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக தளபதியின் நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது  முதல் கட்டமாக 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.  இன்னும் 21 இடங்களில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.  மாணவர்கள் இந்த புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கேயே அமர்ந்து படிக்கலாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நூலகத்தில் உறுப்பினராகி எடுத்துச் செல்லலாம்." என்று கூறினார்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பலருக்கு வேலை இழப்பு - எல்.முருகன்


மேலும் படிக்க | வினாத்தாள் குளறுபடி : திருவள்ளுவர் பல்கலைகழகம் மீது புகார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ