2 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்; ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’ திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். மே- 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நடைபெறும். இதற்காக திமுக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அப்போது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். அடுத்து ஆட்சி அமைக்க திமுக- அதிமுகவுக்கு ஆதரவு தரமாட்டோம். ஆனால் திமுகவுடன் சேர்ந்து இந்த ஆட்சியை கலைப்போம்.


அமமுக ஆதரித்தால் மட்டுமே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும்’’ என அவர் தெரிவித்துள்ளார். திமுகவுக்கும்- அமமுகவுக்கும் இடையே மறைமுக தொடர்பு இருப்பதாக அதிமுக தெரிவித்து வந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது திமுகவுக்கு அமமுக ஆதரவு தரும்’’ என தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.