தமிழகத்தில் நேற்று கோவிட்-19 காரணமாக இரட்டைத் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் வேறு எந்த நோய்யும் இல்லாத 18 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். 90 நாட்களாக கோவிட்-19 காரணமாக தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 38,026 ஆக இருந்த போதிலும், தமிழ்நாட்டில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை புதன்கிழமை கிட்டத்தட்ட 43% அதிகரித்து 476 ஆகவும், செவ்வாயன்று 332 ஆகவும் இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு


செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட சிறுமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கடுமையான கோவிட் இருப்பது தெரிய வந்தது, மேலும் அவரது நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.  மதியம் 2.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  "மருத்துவர்கள் இறப்புக்கான காரணத்தை விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சிறுமிக்கு தடுப்பூசி போடப்பட்டது மற்றும் வேறு நோய்த்தொற்று எதுவும் இல்லை. அவருக்கு நீண்ட காலமாக இருமல் மட்டுமே இருந்தது" என்று சுகாதார செயலாளர் பி செந்தில் குமார் கூறியுள்ளார். 



மூன்றாவது அலை முடிந்து பிப்ரவரி 27க்குப் பிறகு கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில்,  புதிய தொற்று எண்ணிக்கை 400-ஐத் தாண்டி உள்ளன. பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி எஸ் செல்வவிநாயகம் கூறுகையில், "இம்முறை பிஏ4-ன் டி பிஏ5 மாறுபாடுகள் எழுச்சியை ஏற்படுத்துகின்றன.முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டுமே பரவுவதைத் தடுக்க ஒரே வழி. மூத்த குடிமக்கள் மற்றும் கொமொர்பிட் நிலைமைகள் உள்ளவர்கள் தடுப்பூசிகளைப் போட வேண்டும், ”என்று அவர் கூறினார்.


 



மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சதவீதம் குறைவாக இருந்தாலும், முழுமையான எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்றுநோய்களின் அதிகரிப்பு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி துணை இயக்குனர் டாக்டர் பிரப்தீப் கவுரின் கூற்றுப்படி, வைரஸுக்கு உருமாற நேரம் எடுக்கும், இதனால் அது புதிய வேரியண்டில் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். புதிய தொற்று சவாலானதாக இருக்கலாம், ஏனெனில் அவை தடுப்பூசிகளை தேவையற்றதாக மாற்றும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு (95), கோவையில் (26), நீலகிரியில் (23) என்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. 



காஞ்சிபுரத்தில் 21 புதிய தொற்றுகளும், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூரில் தலா 20 தொற்றுகளும் பதிவாகியுள்ளன. சேலத்தில் 6 புதிய தொற்று பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் வேலூரில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளன. பதினான்கு மாவட்டங்களில் புதிய கோவிட் தொற்று எதுவும் பதிவாகவில்லை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்போது மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1938 நோயாளிகளில், 119 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | இரவு நேரங்களில் அலட்சியம் காட்டும் அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR