மத்திய அரசு செய்துவிட்டது, திராவிட மாடல் செய்யுமா? எச்.ராஜா கேள்வி
மத்திய அரசு செய்துவிட்டது, திராவிட மாடல் செய்யுமா என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் உயர்ந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தில் 110 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயந்தது.இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானியர்கள் திணறி வந்தனர்.
இந்த சூழலில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அதற்கான அறிவிப்பையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் இதை குறிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு செய்துவிட்டது, திராவிட மாடல் செய்யுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்த நிலையில், எச்.ராஜாவின் பதிவும் இதை குறிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்திருந்தார். அப்போது, மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என அவர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரூ.15 லட்சத்தை பிரதமர் எப்போது தருவார்? - அண்ணாமலைக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR