மகாராஷ்டிரத்தில் தலித் சிறுவர்கள் நிர்வாணமாக அடித்து கொடுமைப்படுத்தபட்ட நிகழ்விற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், உயர்ஜாதியினர் பயன்படுத்தும் கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.


நிர்வாணமாக வைத்து தாக்கியது மட்டுமின்றி அந்த சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அப்பகுதி மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனைவரின் மனதை உலுக்கும் வகையில் உள்ள இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக சுற்றி வருகிறது. 


இதையடுத்து, மனிதாபிமான இந்த செயலினை கண்டித்து முன்னதாக  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், இந்நிகழ்விற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்...! அதில் அவர்,, 


மராட்டியத்தில் கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள். குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்றார்.