பிரச்சனையே உங்களாலதான் வந்துச்சு : ஓபிஎஸ் ஓப்பன் டாக்..!
நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட போதே காங்கிரஸ் கட்சியுடனான உறவை திமுக விலக்கிக்கொண்டிருந்தால் நீட் என்ற பிரச்சனையே தமிழகத்திற்கு வந்திருக்காது என, சட்டப்பேரவை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து தொடர்பான சர்ச்சைகளும், அரசியல் ரீதியான மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இது குறித்து ஓபிஎஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என தெரிவித்த திமுக இன்று வரை அதில் எவ்வித முடிவும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கம்தான், நீட் என்ற தேர்வையே அறிமுகம் செய்ததாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று தமிழகத்திற்கு நீட் என்ற பிரச்சனையே வந்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வருகின்ற கல்வி ஆண்டில் மருத்துவச் சேர்க்கை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா அல்லது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா என்ற குழப்பத்தில் மாணவ, மாணவிகள் உள்ள நிலையில் விரைவாக இதற்கு திமுக அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR