வேலூர் என்று சொன்னாலே பல்வேறு வரலாற்று சிறப்பம்சம்தான் நியாபகம் வரும். சிப்பாய் புரட்சி முதல் தேசிய கொடி உருவாகிய இடம், மற்றும் அகழியுடன் உள்ள கோட்டை என அடுக்கிக் கொண்டே போகலாம்... அப்படிப்பட்ட வேலூர் வெயிலுக்கும் பெயர் போன ஊர்தான். பொதுவாகவே தமிழகத்தில் ஏப்ரல் மே மாத காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் வேலூரில் மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் ஆரம்பித்து விட்டது. இந்த ஆண்டில் பருவ மழை பொழித்து போனதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் உச்சத்தை நெருங்கி விட்டது. கடந்த சில நாட்களாக 100  டிகிரி, 101 டிகிரி, என தினமும் வெப்பத்தின் அளவு சென்சுரி அடிக்காமல் வீடுதிரும்புவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனால் கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வெயிலில் வேலை பார்க்கும் மக்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வெயிலில் தாக்கத்தை தணிக்கப் பொதுமக்கள் இயற்கை பழங்கள் பக்கம் சாய்ந்துள்ளனர். தர்பூசணி, இளநீர், பப்பாளி உள்ளிட்டவை அதன் வரிசையில் அடங்கும். ஒரு கிலோ தர்பூசணி 20 ரூபாய்க்கும், ஒரு பெத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இளநீர், பப்பாளி,  வெள்ளேரி, ஜூஸ், கரும்புச் சாறு, பனங்காய் நுங்கு, கீர்க்காய், பழ வகைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



மேலும் படிக்க | சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்


அதேபோல் வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடப்பதால் கேரம்போர்டு, தாயம், சீட்டு போன்றவை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் இயங்கி வருகிறது. இதற்கிடையே வேலூரில் தினமும் சிறிது நேரம் மின்சாரம் தடைப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எப்படியாவது இந்த கோடையை கடத்தாவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே எல்லோரும் உள்ளனர். 


மேலும் படிக்க | மதுவுக்கு மனிதர்கள் அடிமையாக இருப்பது ஏன்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR