மதுவுக்கு மனிதர்கள் அடிமையாக இருப்பது ஏன்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மதுவுக்கு ஏன் மனிதர்கள் அடிமையாகிறார்கள்? என்கிற காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 03:07 PM IST
  • மதுவுக்கு ஏன் மனிதர்கள் அடிமையானர்கள்
  • அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தகவல்
  • குரங்களிடமிருந்து பழகியதா மது பழக்கம்?
மதுவுக்கு மனிதர்கள் அடிமையாக இருப்பது ஏன்? ஆய்வில் அதிர்ச்சி தகவல் title=

மனிதர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாகிறார்கள்? என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையில், மனிதர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கான காரணத்தை அறிய குரங்குகள் மீது ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதற்காக குரங்குகள் உண்ணும் பழங்கள் மற்றும் அவற்றின் சிறுநீர் மாதிரிகள் பலமுறை ஆய்வு செய்யப்பட்டதில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில், பழுத்தவுடன் லேசாக அழுகிப்போன இத்தகைய பழங்களை குரங்குகள் தேடி வருவது தெரிய வந்துள்ளது. குரங்குகள் உண்ணும் பழங்களில் சுமார் 2 சதவீதம் ஆல்கஹால் கலந்திருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க| Fact Check: மொபைல் பயன்பாடு மூளைப் புற்றுநோயை ஏற்படுத்துமா? 

25 ஆண்டுகளாக ஆய்வு 

ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் ராபர்ட் டட்லி, 25 ஆண்டுகளாக மனிதர்களில் மதுவுக்கு அடிமையாவதை ஆராய்ச்சி செய்து வருகிறார். இது குறித்து 2014-ம் ஆண்டு புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்தார், அதில் மனிதர்கள் மதுவுக்கு அடிமையானதற்கு குரங்குகள்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மதுவை நுகர விரும்பும் குரங்குகள், பழங்கள் பழுக்கம் காலத்தை எதிர்நோக்கியிருப்பதை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பழக்கம் குரங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பழகியிருக்கலாம் எனவும் ஆய்வு குறிப்பிட்டது. 

புதிய ஆய்வில் தகவல்

இதற்குப் பிறகு, மனிதர்களிடம் மதுவுக்கு அடிமையாவதை அறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக உயிரியலாளர்கள் மேற்கொண்டனர். பனாமாவில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு கை சிலந்தி குரங்கின் சிறுநீர் மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர். இந்த குரங்குகள் சில அழுகிய பழங்களை சாப்பிட்டதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், அவற்றின் சிறுநீரில் 1 முதல் 2 சதவிகிதம் வரையிலான ஆல்கஹால் உள்ளடக்கம் இருப்பதையும் உறுதி செய்தனர். இயற்கையான நொதித்தல் மூலம் பழுத்த பழத்தின் மூலம் குரங்குக்கு கிடைத்த ஆல்கஹால் என்பதும், இந்த குறைந்த அளவு ஆல்கஹால் பீர் போன்றது என்றும் தெரிவித்துள்ளனர். அவை அத்தகைய பழங்கள் உண்பதை மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், வித்தியாசமான ஆற்றலுக்காக அவற்றை உண்ண விரும்புவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பழக்கம் குரங்களிடம் இருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் முடிவாக இருக்கிறது. 

மேலும் படிக்க | கோடையில் எந்த நேரத்தில் தயிர் சாப்பிட வேண்டும்? நோய்களை விரட்டும் அற்புத மருந்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News