அதிமுகவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது: MK.ஸ்டாலின்!
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம் 13 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுவை திரும்பபெற டிச.,18 கடைசி நாள் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இதுவரை உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு கட்டங்களாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் கமிஷனர் பழனிசாமியா? எடப்பாடி பழனிசாமியா? என்ற கேள்வி எழுகிறது. அதிமுக.,வுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக, நீதிமன்றம் சென்றது. தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பில் உள்நோக்கம் இருப்பதாகவே திமுக கருதுகிறது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும்.
வார்டு வரையறை பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இதுவரை பதில் வரவில்லை. வார்டு வரையறை செய்யப்படாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தவறு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.