நகைச்சுவையால் அனைவரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்த நடிகர் விவேக், தற்போது தனது மரணத்தினால், அனைவரையும் அழ வைத்து விட்டு சென்று விட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவேக்கின் நகைச்சுவை, சிரிக்க மட்டும் அல்ல, அனைவரையும் சிந்திக்க வைத்தது. அவர் கருத்து கூறுவதோடு நின்று விடாமல், ஒரு முன்னுதாரணமாக திகழும் வகையில் அதனை தனது வாழ்க்கையில் கடை பிடிக்கவும் செய்தார்.  அவர் நட்ட மரங்கள் அதற்கு சாட்சியாக என்றென்றும் நின்று, அவரது சிறப்பை எடுத்துக் கூறும்.


சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது நகைச்சுவை நமது மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும். 


ALSO READ | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..


மக்களுக்கு பகுத்தறிவை ஏற்படுத்த, மிகவும் சீரியஸான ஒரு விஷயத்தை கூட காமெடியாக சொல்லும் அவரது பாணி அனைவரையும் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல. 


தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை. மாரடைப்பின் காரணமாக அவர் இறந்ததை அடுத்து, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi), நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 



’பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவையும்,  அறிவார்ந்த சிந்தனையை தூண்டும் வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவர் தனது நிழல் வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’ என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். 


நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார். உடனடியாக அவர் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர், அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டு இறந்து விட்டார்.  


ALSO READ | Actor Vivek: நட்ட மரங்களும் வாடுகிறது… சிரிப்பு செத்துவிட்டதே!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR