சாராயக்கடையை ஏலத்தில் எடுத்த பெண்!
சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக இயங்கும் சாராயக்கடையை பெண் வியாபாரி 33 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சராக எம்ஜிஆர் ஆட்சி வகித்த 1981ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கள் ஆகியற்றிர்க்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை மறைமுகமாக நடைபெற்றுதான் வருகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புளியங்கொட்டை கிராமத்தில் கள்ளச்சாரய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மலை கிராமம் என்பதால் இங்கு ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் ஏராளமான சாராய பிரியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு சாராயக்கடையில் நாள்தோறும் அமோகமான விற்பனை இருக்கும் எனக்கூறப்படுகிறது. அந்த சாராயக்கடை ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில், அப்பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் அந்த சாராயக்கடைக்கு ரூ.10 லட்சம் ஏலத்தொகையாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமானோர் தங்கள் ஏலத்தொகையை கூறி வந்துள்ளனர். போட்டா போட்டிகளுக்கு இடையே அந்த சாராயக் கடையை , பெண் ஒருவர் ரூ.33 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த சாராயக்கடை விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | சிறுவர்களை மது அறுந்த வைத்த இளைஞர்கள்! தட்டி கேட்ட பாட்டிக்கு நடந்த கொடூரம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe