சிறுவர்களை மது அருந்த வைத்த இளைஞர்கள்! தட்டி கேட்ட பாட்டிக்கு நடந்த கொடூரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மூதாட்டி ஒருவரை கொடூரமாக தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 6, 2022, 04:49 PM IST
  • மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் 14 தையல்கள் போடப்பட்டு உள்ளது
  • தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவர் கைது
சிறுவர்களை மது அருந்த வைத்த இளைஞர்கள்! தட்டி கேட்ட பாட்டிக்கு நடந்த கொடூரம் title=

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டுமேடு பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி கன்னியம்மாள் (வயது 60). 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ரஜினி, விஜய் ஆகிய இரு வாலிபர்களும் அங்குள்ள  சிறுவர்கள் சிலரை மது அருந்துமாறு வற்புறுத்தி உள்ளனர்.

இதனை கண்ட கன்னியம்மாள் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரையும் அழைத்து கண்டித்து அனுப்பி உள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இருவரும் மது போதையில் கத்தி மற்றும் இரும்பு ஆயுதத்தால் மூதாட்டியை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி 

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் 14 தையல்கள் போடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் மூதாட்டியை தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 

இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலிசார் தலைமறைவாக இருந்த மூதாட்டி கன்னியம்மாளை தாக்கிய அதே நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படடிக்க | அபுதாபி விமான நிலையம்: பயணர்கள் வருகையில் ஏற்றம், முதலிடத்தில் இந்தியர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News