சினிமா ஆசையில் சின்னாபின்னமாகிய சிவப்பழகி
சென்னையில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொழிலதிபரை ஏமாற்றி 550 சவரன் தங்க நகைகள் மற்றும் ,பல லட்ச ரூபாய் பணத்தை, இளம்பெண் ஒருவர் சுருட்டிய சம்பவம் கடந்த வாரம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சினிமா ஆசையில், சின்னாபின்னமாகிய சிவப்பழகியை, சிறையில் அடைத்த வைத்த சம்பவத்தின் முழு பின்னணி இதோ....
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி முத்து நகரைச் சேர்ந்தவர் 40 வயதான சேகர். தன்னுடைய தம்பி மற்றும் தாயுடன் இணைந்து நிதி நிறுவனம் மற்றும் இனிப்பகம் நடத்தி வருகிறார். குடும்பமே நல்ல உழைப்பாளிகள். ஆனால், சேகரின் மனைவிக்கு மட்டும் உடல் நலம் மோசமான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் ஒருவர் மூலம், சேகருக்கு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 22 வயதாகும் ஸ்வாதி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் செல்போனில் பேசி பழகியவர், ஸ்வாதியின் அழகில் முழுவதுமாய் மூழ்கிப் போனார். தொழிலுக்கு செல்லாமல் முழுநேரமும், ஸ்வாதியுடன் ஊர் ஊராய் சுற்றியிருக்கிறார். இப்படி உயிருக்கு உயிரான காதலை உயர்தர ஹோட்டல், உல்லாச பயணம் என பணத்தை ஊற்றியும் வளர்த்து வந்தார்.
இதற்காக வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை தண்ணீர் போல செலவு செய்திருக்கிறார். சேகரின் தம்பி, கடின உழைப்பால் நிதி நிறுவனம் மற்றும் இனிப்பகத்தில் வரும் வருமானத்தை வீட்டில் அடுக்கிக்கொண்டே வர, சேகர் அதை உருவிக்கொண்டே வந்திருக்கிறார். லட்சக்கணக்கான பணமும், தங்க நகைகளும் காணாமல் போக ஒரு கட்டத்தில் அது சேகரின் தம்பிக்கும், தாய்க்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சேகரிடம் அதுகுறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணான பதிலை கொடுக்க, கையோடு குடும்பத்தினர் பூவிருந்தவல்லி காவல்நிலையம் சென்றார்கள். காவல்நிலைய அதிகாரிகள் புகாரைப் பெற்றுக்கொண்டு சேகரை வரவழைத்து விசாரித்தனர். எல்லாம் வெட்ட வெளிச்சமானது. காதலி ஸ்வாதிக்கு வீட்டிலிருந்து 550சவரன் நகை ,பணம் மற்றும் தங்கக்கட்டிகளை அன்பளிப்பாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
இதனைக் கேட்டுத் திகைத்துப் போன காவல்துறையினர் ஸ்வாதியை அழைத்து விசாரித்ததில் தான்சேகரிடம் இருந்து எதையும் அன்பளிப்பாகப் பெறவில்லை என கூறியுள்ளார். ஸ்வாதியின் பதிலால் குழப்பமுற்ற காவல்துறையினர் ஸ்வாதியின் பின்னணியைத் தோண்ட ஆரம்பித்தனர். தோண்ட தோண்ட பூதம் கிளம்பிய கதை போல பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தன. ஸ்வாதி, இதற்கு முன்னரே பாலியல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும் மாடலிங் என்ற போர்வையில் விபச்சார தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க | 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி -Viral News
உடனே காவல்துறையினருக்கு உரித்தான பாணியில் ஸ்வாதியை விசாரித்ததில் சினிமா ஆசையில், சினிமா படம் எடுக்க வேண்டும் என்ற மோகத்தில், சேகரிடம் இருந்து 550 சவரன் தங்க நகைகள், பல லட்சம் ரூபாய் பணம், பல கிலோ தங்கக்கட்டிகளை ஏமாற்றியது உறுதியானது. உண்மை தெரியவந்ததை அடுத்து ஸ்வாதி மற்றும் சேகர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன்னை விட18 வயது மூத்த நபரிடம் சில்மிஷம் செய்து சிறையில் இருக்கும் ஸ்வாதியின் கதை, உழைக்காமல் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் அனைவருக்குமே ஒரு பாடம்.
மேலும் படிக்க | இந்து - இஸ்லாமிய நல்லிணக்கம்: 350 ஆண்டு பழமையான ‘அல்லா சாமி’ பூக்குழி திருவிழா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ