திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும், திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் 8 சதவீத local body tax - ஐ நீக்க வேண்டும், ஒரே ஒரு திரையுடன் இருக்கும் பெரிய திரையரங்கங்கள் 4 திரைகள் வரை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கூட்டாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.  தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் , தமிழ்நாடு திரைப்பட  விநியோகஸ்தர்கள் சங்கம் , தமிழ்த் திரைப்படத்  தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தபிறகு தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு..! நடந்தது என்ன?


அப்போது பேசிய அவர்கள், "திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும் ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்படுகின்றது.  இவற்றுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசால் 8 விழுக்காடு வரி Local body tax (( உள்ளாட்சி வரி)) எனும் பெயரில்  விதிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 8 விழுக்காடு வரியை நீக்க வேண்டுமென தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த 8 விழுக்காடு வரி குறைக்கப்பட்டால் டிக்கெட் விலையும் 100 ரூபாய்க்கு 8 ரூபாய் குறையும். மேலும் திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் முன்பு 4000 திரையரங்குகள் இருந்த நிலையில் தற்போது ஆயிரம் திரையரங்கங்களாக குறைந்துவிட்டது. 


ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளில் கூட தற்போது 100 ...150 பார்வையாளர்கள்தான் வருகின்றனர். எனவே ஒரேயொரு திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை,  நான்கு திரைகள் வரை கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து  அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஒரு திரையை 3..4 திரைகளாக மாற்றினால் சிறுபட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும், வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. 


பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டது, எனவே தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம், வரிச்தலுகையை மீண்டும் வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏழு நாள் கொண்டாட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறினர்.


மேலும் படிக்க | சென்னையில் கடந்த 14 நாளில் 10 கொலைகள்! கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ