சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்திருக்கக்கூடிய தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சரைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். அதேபோல், தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


 



தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாயகத்தின் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது, தன்னுரிமை மிதித்துத் துவைக்கப்படும்போது, "சின்னமலை வரிதரமாட்டான்!ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டான்!" என முழங்கி, உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்” என குறிப்பிட்டிருந்தார்.


மேலும் படிக்க | நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்


மேலும் படிக்க | உண்மை காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்திய இளைஞன் கைது


மேலும் படிக்க | சாமானிய மக்களுக்கு உதவ மத்திய அரசுக்குத்தான் வாய்ப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ