Tiruvallur Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்று முடிவடைந்தது. முதல் கட்டமாக தமிழகத்தில் நடைப்பெற்ற தேர்தல், 7 கட்டமாக பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவநடைந்த இத்தேர்தலின் நிலவரம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில், நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. இதில், தமிழகத்தின் 33வது சட்டமன்ற தொகுதியாக இருக்கும் தேனியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி தொகுதி:


தேனியில் மொத்தம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இதில், பெரியகுளம் சோழவந்தான் ஆகியவை தனித்தொகுதிகள் ஆகும். 


இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. கூடவே, அதிமுக கூட்டணியில் தெமுதிக மற்றும் சில சிறிய கட்சிகளும் போட்டியிட்டன. பாஜக கட்சி கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, ஓபிஎஸ் புதிய நீதிக்கட்சி ஆகியவையும் போட்டியிட்டன. 


இதில், அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிட்டார். அமமுக+பாஜக கூட்டணியில் தினகரன் போட்டியிட்டார், திமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயபால் ஆகிய வேட்பாளர்களும் நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்டனர். 


மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்


2014 நாடாளுமன்ற தொகுதி விவரம்:


2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அஇஅதிமுக கட்சியை சேர்ந்த பார்த்திபன், 5,71,254 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். திமுக கட்சியை சேர்ந்த பொன்.முத்துராமலிங்கம் 2,56,6722 வாக்குகளையும், மதிமுக கட்சியை சேர்ந்த அழகுசுந்தரம் 1,34,362 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜே.எம்.ஆரோன் ரஷீத் 71,432 வாக்குகளை பெற்றிருந்தார். 


வெற்றி வாய்ப்பு யாருக்கு?


தேனி வாக்கு சதவிகிதம் மொத்தம் 69.84 சதவிகிதமாக பதிவாகியிருந்தது. இந்த தொகுதிய பொறுத்தவரை அதிமுக+பாஜக கூட்டணியில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கும், திமுக+இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட தங்க தமிழ் செல்வனுக்கும் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. பெரும்பாலும், திமுக இந்த தொகுதியை பிடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 2009ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற லோக் சபா தேர்தல்களில் இவர் 41.76 மற்றும் 12.26 சதவிகித வாக்கு வித்தியாசத்திலும் தோற்றிருக்கிறார். 


மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ