தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனாவை பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்.... "கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியுள்ளார்.


சென்னை தவிர மற்ற இடங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையில் தொற்று பரவலை தடுக்க கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். சென்னையில் 15 மண்டல ஐஏஎஸ் அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ளதாக தெரிவித்தனர்.


மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56% பேர் குணமடைந்துள்ளனர், இறப்பு விகிதம் 0.8 ஆக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. மக்கள் நெருக்கமாக வாழ்வதால் நோய் தொற்று அதிகம் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.


READ | கொரோனா வைரஸ் பலவீனம் அடைத்ததாக நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை -WHO


இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என கூறிய அவர், தமிழகத்தில் தான் அதிகம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சரியான சிகிச்சையின் மூலம் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு என தெரிவித்துள்ளார்.


தமிழக அரசு இதுவரை 11,51,700 PCR கருவிகளை கொள்முதல் செய்துள்ளது. சரியான முறையில் சிகிச்சை அளித்ததின் விளைவாக குணமடைந்தவர்கள் சதவிகிதம் அதிகமாகியுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இலவச அரிசி, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டதால் உணவு பிரச்சனையில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து துறை அதிகாரிகளும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்றனர். பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன" என அவர் மேலும் கூறினார்.