சென்னை: ஐபிஎல் (IPL) போட்டிகள் திரையரங்குகளில் ஸ்க்ரீனிங் செய்யப்படாது என தகவல் மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெளிவுபடுத்தினார். ஒரு விழாவுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த  அவர் இவ்வாறு கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இப்போது  திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டாததால், ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் திரையிட்டால், அதாவது ஸ்க்ரீனிங் செய்தால் அதன் மூலம் வருவாயை ஈட்டலாம் .


கொரோனா (Corona) தொற்று பரவலை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மார்ச் முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டதால் 2020 ஒரு சோதனைகள் மிக்க ஆண்டாகவே இருந்து வருகிறது.


தியேட்டர்கள், சினிமா ஊழியர்கள் மற்றும் திரை துறையை சார்ந்துள்ள துறைகளுக்கு வருவாய் இழப்பு மற்றும் அதன் விளைவாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கடம்பூர் ராஜு கடந்த மாதம் கவலை தெரிவித்தார். ஆனால் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு திரையரங்குகளை திறப்பது பற்றி யோசிக்க முடியாது. ஏனெனில் அது கூட்டம் அதிகம் கூடும் பொது இடமாகும் என அவர் கூறினார்.


ALSO READ | CPL 2020 இறுதிப்போட்டி TKR vs SLZ: 4வது முறையாக பட்டத்தை வென்ற டிரிபாகோ நைட் ரைடர்ஸ்


OTT வெளியீடு சினிமா வணிகத்திற்கு நல்லதல்ல, ஆனால் OTT ஸ்ட்ரீமிங் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற தலம் என்பதால் அது தொடர்பாக ஒன்றும் செய்ய இயலாது எனவும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார். 


இருப்பினும்,  வைரஸ் பெருந்தொற்று பரவல், கட்டுக்குள் வராத வரை.அது பற்றி யோசிக்க இயலாது என்றும்,  தியேட்டர்கள் அதுவரை மூடப்பட்டிருக்கும்  என்ற நிலையில் எந்த வித மாற்றமும் இல்லை என கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.


ALSO READ | IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!!