என்னை போன்ற பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன்னால் சிந்தித்து செயல்படுவது தான் அவரை போன்ற அரசியல் வாதிக்கு ஏற்புடையதாக இருக்கும் என காஞ்சிபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த 10 தினங்களாகவே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை... சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?


இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலினை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்கள் குளிர்பானங்களை வழங்கினார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசுகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடுமென்றும், செங்கோட்டையின் தலைமையிலா அல்லது வேலுமணி தலைமையிலா என தெரியவரும் என  விமர்சித்துள்ளார். ஆனால் தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கும் எனவும் எந்த சலசலப்புக்கும் பிளவுக்கும் அதிமுகவில் இடமில்லை என தெரிவித்தார்.


45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன், இது மாற்றுக் கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும்.‌ நேற்றைய தினம் சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருத்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதுதான் அவரைப் போன்ற அரசியல்வாதிக்கு உயர்வாக இருந்திருக்க வேண்டும். என்றென்றிற்கும் அதிமுக தொண்டர்களுக்கு தூணாக இருப்பேன என தெரிவித்த அவர் மேலும் என்னைப் பொறுத்தவரை மற்றவரை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். 


இந்த இயக்கத்திற்கு எப்பொழுது சோதனை வரும் பொழுது, இந்த தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்று இருக்கிறேன் என தெளிவுபடுத்துகிறேன் என தெரிவித்தார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தலுக்குப் பிறகு அதிமுக பிளவுபடும் அது செங்கோட்டையின் தலைமையிலா அல்லது வேலுமணி தலைமையிலா என தெரியவரும் என விமர்சனம் செய்திருந்தார் அதற்கு இன்று பதிலடி கொடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ