கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டி

Savukku Shankar : கோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2024, 03:32 PM IST
  • சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை
  • உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேட்டி
  • கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் மீது புகார்
கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டி title=

யூடியூபர் சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற சேனலை நடத்தி வந்தார். அத்துடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்து வந்தார். அப்போது ஒரு பேட்டியில் காவல்துறையில் இருக்கும் பெண் காவல்துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சவுக்கு சங்கர் கோவை சைபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் வைத்து கடந்த நான்காம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நீதபதி முன்பு ஆஜர்படுத்திய பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்

அதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாகவும், கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டது. இந்நிலையில் மறு சிகிச்சைக்காக மீண்டும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அந்த பழைய மாவு கட்டு அவிழ்க்கப்பட்டு புதிதாக மாவு கட்டு போடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வெளியில் அழைத்து வரப்படும் பொழுது சவுக்கு சங்கர் " சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்ததார். கோவை சிறையில் தான் உனக்கு சமாதி" என்று மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்தபடியே வெளியில் வந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால். சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அவரை சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, கோவை சிறையிலுள்ள சங்கருக்கு சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் இன்று (மே. 12) சார்வு செய்யப்பட்டுள்ளது. சங்கர் மீது பதியப்பட்டுள்ள 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News