பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி," புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் வந்து சென்றது முதல் அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கேசினோ என்ற சூதாட்டத்தை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதுச்சேரி அரசு அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் சரணாகதியாகிவிட்டார் என நாரயணசாமி குற்றஞ்சாட்டினார்".
மேலும் படிக்க | ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படையே பிழைதான் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிரடி
தொடர்ந்து பேசிய நாராயணசாமி, ராஜீவ்காந்தி கொலையாளிகளை அக்குடும்பத்தினர் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது மனவேதனையை அளிக்கின்றது என்றும் முன்னாள் பிரதமரை கொன்றவர்களின் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்ரபுத்தியை காட்டுகிறது என்று கூறினார். பேரறிவாளனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டி பிடித்து வரவேற்றதற்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரசின் இந்த நிலைப்பாடு குறித்து விமர்சித்த தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் எம்பி ஜி.கே. வாசன், " தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூரக்கொலை செயலில் ஈடுபட்ட பேரறிவாளன் விடுதலையில் உறுதியான உணர்வுப்பூர்வமான நிலையை எடுக்காமல் ஒருபுறம் முற்றுகைப் போராட்டம் என்றும், மறுபுறம் பேரறிவாளனின் விடுதலையை பாராட்டும், கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து இருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சினையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுய நலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா என்று தெரியவில்லை" என்று விமர்சித்து உள்ளார்.
மேலும் படிக்க | ஏழு பேரும் குற்றவாளிகள் மட்டுமே.! - அண்ணாமலை ஆவேசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR