இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் திட்டவட்டம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

E-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பீலா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்காணிக்கப்படுவதாக சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து 32 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தமிழகத்தில் மொத்தம் 86,235 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1133 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாகவும், கொரோனா மையம், பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளிட்டவை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் வழிமுறைகளை பின்பற்றி தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


READ | நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 11 வகை மூலிகை கொண்ட இனிப்பு பண்டம்!


மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உடனிருப்போர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். கொரோனா வழிமுறைகள் பின்பற்றாமல் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், மாநில எல்லையில் நடை பாதையாக வரும் கர்நாடகத்தவர்கள் இபாஸ் இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.