பொதுவாக இஸ்லாமிய புனிதமான நோன்பு மாதத்தின் நாட்கள் 29 அல்லது 30 வரை இருக்கும். ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், இஸ்லாமிய மக்கள் பிறை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கம் , ஏழை மக்களுக்கு தர்மம் வழங்கி கடைப்பிடிப்பதாக உள்ளது.


 பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.


மேலும் படிக்க | நீலகிரியில் நூதன முறையில் பிரச்சாரம் செய்த திமுக ஆ.ராசா! வைரல் வீடியோ!


அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டத்தில் சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை அன்பை பரிமாறிக் கொண்டனர்.


 ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான ராம்ஜான் பெருவிழா மாநகரில் பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் 110 இடங்களில் கூட்டு தொழுகை நடைபெற்றது.


மேலும் படிக்க | இந்த நாடு வாடகைக்கு விடப்படுகிறது - கோவையில் சீமான் பிரச்சாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ