நிழல் தரும் மரங்களை வெட்டிய வணிக வளாக உரிமையாளர்... மக்கள் கடும் எதிர்ப்பு!
தூத்துக்குடி வணிக வளாகத்தை ஒட்டி சாலையில் இருந்த வேம்பு, வாகை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களை வணிக வளாக உரிமையாளர் வெட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி வணிக வளாகத்தை ஒட்டி சாலையில் இருந்த வேம்பு, வாகை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களை வணிக வளாக உரிமையாளர் வெட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள மணிநகர் இரண்டாவது தெரு பகுதியில் சாலை ஓரங்களில் நிழல் தரக்கூடிய வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து அந்தப் பகுதி முழுவதும் படர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயில் கொடுமையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியும் மேலும் அந்தப் பகுதியில் இளைப்பாறியும் வந்தனர்.
வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வேம்பு மற்றும் வாகை மரங்களை வெட்டிய உரிமையாளர்
இந்நிலையில் அந்தப் பகுதியில் மங்களவேல் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது இந்த வணிக வளாகத்தை ஒட்டி இந்த மரங்கள் அமைந்துள்ளதால் மேலும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் மரங்களின் நிழலில் வாகனத்தை நிறுத்துவதால் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வேம்பு மற்றும் வாகை மரங்களை இன்று காலை வெட்டியுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் புகார்
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எவ்வித அனுமதியும் இன்றி பொதுமக்கள் இருக்கக்கூடிய இந்த பகுதியின் சாலை ஓரத்தில் உள்ள மரங்களை நீங்கள் எப்படி வெட்டுகிறீர்கள் என்று வணிக வளாக உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் புகார் அளித்தனர். இதை எடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் மரங்கள் வெட்டுப்படுவது குறித்து விசாரித்துச் சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சார கம்பிகள் மீது மரங்கள் படுவதால் வெட்டியதாக கூறிய வணிக வளாக நிறுவனம்
இந்நிலையில் இது தொடர்பாக வணிக நிறுவனத்தை கேட்டபோது தங்களது வணிக வளாகம் அருகே உள்ள இந்த மரங்களால் தங்கள் வணிக ஊடாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் முழுமையாக தெரியாமல் உள்ளது. மேலும் அருகே உள்ள மின்சார கம்பிகள் மீது மரங்கள் படுவதால் வெட்டினோம் என கூறினர்.
இருசக்கர வாகனத்தை நிறுத்த விடாமல் செய்ய வெட்டப்பட்ட மரம்: மக்கள்
வணிக வளாக உரிமையாளர் வேண்டுமென்றே அந்தப் பகுதியில் நிழல் இருப்பதால் பொதுமக்கள் கூடுகின்றனர் இருசக்கர வாகனத்தை நிறுத்துகின்றனர் மரத்தை வெட்டினால் பொதுமக்கள் கூட மாட்டார்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்த மாட்டார்கள் என்ற நோக்கத்தில் தான் மரத்தை வெட்டி உள்ளனர் என குற்றம் சாட்டினர்.
மேலும் படிக்க | எல்லை மீறிய எதிர்க்கட்சிகள்... ஆன்லைன் மீம்களால் தற்கொலை செய்த பெண் - நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ