Yediyurappa Case: 'அந்த பெண்ணுக்கு இதே வேலை தான்' எடியூரப்பா வழக்கில் புதிய ட்விஸ்ட்!

POCSO Act Against Former CM BS Yediyurappa: முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்தும், இதற்கு எடியூரப்பா கொடுத்த விளக்கத்தையும் இதில் காணலாம். 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 15, 2024, 07:56 PM IST
  • 17 வயது சிறுமியின் தாய் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
  • அந்த தாய் 53 பேர் மீது வெவ்வேறு விதமான வழக்குகளை பதிவு செய்துள்ளார்.
  • தற்போது சிஐடிக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
Yediyurappa Case: 'அந்த பெண்ணுக்கு இதே வேலை தான்' எடியூரப்பா வழக்கில் புதிய ட்விஸ்ட்!  title=

POCSO Act Against Former CM BS Yediyurappa: பெங்களூரு சதாசிவநகர் காவல்நிலையத்தில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாய் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகளை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி எடியூரப்பா பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். மோசடி வழக்கு தொடர்பாக எடியூரப்பாவை சந்திக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

எஃப்ஐஆரில் பதிவான தகவலின்படி, உதவி கேட்டு சென்ற சிறுமியை தனது அறைக்கு தனியாக எடியூரப்பா அழைத்துச்சென்றாராம். இந்த பகிரங்க குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள எடியூரப்பா, இந்த பாலியல் புகார் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், மோசடி வழக்கில் உதவி கேட்டு  வந்த தாய்க்கும் மகளுக்கும் தான் பண உதவி செய்ததாகவும், அப்போது அவர் சரியாக தன்னிடம் பேசவில்லை என்றும், மன ரீதியாக அந்த பெண்ணுக்கு பிரச்சனை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

53 பேர் மீது புகார்

அடிப்படை ஆதாரமற்ற இந்த வழக்கு, வேண்டுமென்றே எடியூரப்பாவுக்கு கலங்கம் ஏற்படுத்த போடப்பட்டது என அவரது அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 81 வயதான எடியூரப்பா மீது புகார் கொடுத்த பெண் இதற்கு முன்பு 53 பேர் மீது வெவ்வேறு விதமான வழக்குகளை அளித்துள்ளதாகவும் ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | CAA இந்தியாவின் உள்விவகாரம், எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் -அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

இந்த வழக்கு மிகவும் சென்சிடீவ் என்பதால், வழக்கின் விசாரணை முடிந்து அறிக்கை வரும் வரை எந்த கருத்தும் சொல்ல முடியாது என கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். மேலும், இது அரசியலுக்காக ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்றும், அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.  தேர்தல் நேரத்தில் பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பா மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சிஐடிக்கு மாற்றம்

போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதால் இந்த விவாகாரம் சிஐடி விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக டிஜிபி அலோக் மோகன் இந்த உத்தரவை அளித்துள்ளார். எடியூரப்பா 2007ஆம் ஆண்டில் எழு நாள் முதலமைச்சராக இருந்த நிலையில், அடுத்து 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார்.  தொடர்ந்து, 2018இல் 6 நாள்கள் மட்டும் முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார்.

மேலும் படிக்க | காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News