Tirunelveli Crime News: நெல்லையில் அ.தி.மு.க நிர்வாகி கொலையில் திடுக்கிடும் திருப்பமாக அவரது உறவினரே அவரை கொன்றது அம்பலமாகி உள்ளது. அதோடு கைதானவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு உறவினர்கள் பதறிய சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன? கைதானவர் சொன்ன வாக்குமூலம் என்ன என்பதை விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை அருகே உள்ள கொங்கந்தான் பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ். இவர் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மேலும் கொங்கந்தான் பாறை அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உறவினர் ஒருவர் இறந்ததால் அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க மரியராஜ் சென்றுள்ளார். அப்போது மதிய நேரத்தில் கல்லறை தோட்டத்தில் குழி வெட்டுவதை பார்த்து விட்டு வருவதாகக் கூறி ஜெயசிங் மரியராஜ் சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாக திரும்பி வராததால், அங்கு சென்று பார்த்த சிலர் அவர் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  


இந்தத் தகவல் அறிந்து வந்த முன்னீர் பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மரியராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இவருக்கு இவரது உறவினரான தாஸ் என்பவருக்கும் மோதல் இருந்தது தெரியவந்தது. 


மேலும் படிக்க - கலவர பூமியான கிருஷ்ணகிரி... சின்ன தூசு பிரச்னை ஜாதி மோதலாக மாறியது - நடந்தது என்ன?


இதனையடுத்து இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான தாசை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்குவாரியில் பதுங்கி இருந்த தாசை போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் நடத்திய விசாரணையில், தான் டிரைவராக வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் வேலைகளை மரியராஜ் செய்து வந்ததாகவும், அப்போது அவருக்கு கட்டுமான பணிகளுக்கு தேவையான ஜல்லி கற்கள் தான் சப்ளை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். அதோடு சமீபத்தில் தாஸ் புதிதாக வீடுகட்டி வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தாராம். அப்படிப்பட்ட சூழலில் ஜெயசிங் மரியராஜ் தாஸை பார்க்கும் போதெல்லாம் தனது பணத்தை ஏமாற்றி அதில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்டி சொகுசாக வாழ்வதாக திட்டிக்கொண்டே இருந்தாராம்.


இதனால் மன உளைச்சல் அடைந்த தாஸ் இதுகுறித்து நேற்று ஜெயசிங் மரியராஜிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தாஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயசிங் மரியராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தாஸை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


ஏமாற்றி வீடு கட்டி சொகுசாக வாழ்வதாக அடிக்கடி திட்டியதால் உறவினரையே ஒருவர் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க - அண்ணன் கொலை? அம்மா - தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ