திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் 72 வயதான கருப்பையா. இவருடைய மருமகன் அரவகுறிச்சியைச் சேர்ந்த மந்திரவாதி அப்பாசேட்(44வயது). அடிக்கடி மாமனார் வீட்டிற்கு சென்று வந்த அப்பாசேட்டிற்கு, அங்கிருந்த விநாயகர் சிலை மீது தீராத ஆசை உண்டானது. சிலைக்கு அலங்காரம் செய்து பூஜை வைத்து வணங்க அல்ல ; மோசடி செய்து பணம் பார்க்கவே ஆசை. அதற்கான திட்டத்தையும் வகுத்து கருப்பையாவிடம் கச்சிதமாக விளக்கியிருக்கிறார், அப்பாசேட். கேட்டதும் பணத்தாசை பற்றிக்கொள்ள மருமகனின் கெட்டிக்கார புத்திக்கு சல்லியூட் வைத்திருக்கிறார், கருப்பையா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


விநாயகர் சிலைக்கு கெமிக்கல் சாயம் பூசி.. அதன் மீது பாலை ஊற்றினால் பால் பச்சை நிறமாக மாறும். ஆம், சாதாரண சிலையை மூலிகை சிலையாக மாற்ற முடிவெடுத்து அதைச் செய்தும் சாதித்திருக்கிறார்கள். அடுத்தென்ன காசுதான். நேரம் பார்த்து ஆள்கிடைக்க காத்திருந்தவர்களிடம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ஆகா...ஒஹோ.. அள்ளிவிட்டவர்கள் அப்படியே 13 லட்சத்தையும் கிள்ளிவிட்டார்கள். டெமோவெல்லாம் பக்காவாக முடிந்தது. இனி கைமாற்றம் மட்டுமே. 


மேலும் படிக்க | காதல் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்..!


சிக்கினான் சேகர் என்று நினைத்துக்கொண்டிருந்த வேலையில் மாமனாரும் மருமகனும் உண்மையிலேயே சிக்கியது ராஜாவிடம்தான். ஆம், உஷாரான ராஜா கையோடு தாராபுரம் போலீசாருக்கு போன் போட்டிருக்கிறார். எடுத்தார்கள் காரை; பிடித்தார்கள் மோசடி மன்னர்களை. சிலையை மீட்டு கருப்பையா, அப்பாசேட் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். போட்ட திட்டங்கள் எல்லாம் பாழாய்ப்போனதே...! 



மேலும் படிக்க | முன்னாள் காதலியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு செக் வைத்த போலீஸ்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR