Tiruvannamalai Landfall Latest News Updates: பெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர், சங்கம் கொண்டலாம்பட்டி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யார், வெம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் வெளியேறி ஆறுகளிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மலை மீது ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு வீடுகளின் மேல் விழுந்ததில் ஏழு பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு பணியினரும், கமாண்டோ பணியாளர்களும் 120க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக ராட்சச கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


தொடரும் மீட்புப்பணிகள்


தற்போது ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. அதன்பின் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து மண் தோன்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மண்ணரிப்பு ஏற்பட்டு பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததால் கடந்த 20 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்ளே சிக்கியவர்கள் அனைவரும் ஒரே அறையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஒரு உடலை கண்டெடுத்ததும் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | வெள்ளத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி பேருந்து, வேன்கள்!


இதுவரை 7 உடல்கள் மீட்பு


ராஜ்குமாரின் வீட்டின் மீதுதான் பாறை விழுந்துள்ளது. ராஜ்குமார் (32), ராஜ்குமார் மனைவி மீனா (26), கௌதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்குமார் மற்றும் மீனாவை தவிர மற்ற நான்கு பேரும் குழந்தைகள் ஆவர். கணவன் கௌதம், மனைவி மீனா, மகன் கௌதம், மகள் இனியா ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ராஜ்குமாரின் உறவினர் குழந்தைகள் ஆவர்.


இதில் சிறுவன் கௌதம் உடலையும், இரண்டு சிறுமிகளின் உடலையும், ஒரு ஆணின் உடலையும் மீட்டுள்ளதாகவும், மேலும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒருவரின் உடலை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட ஆறு உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடையாளம் காணும் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மீட்புப்பணிகள் நடைபெறும் சம்பவ இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு முகாமிட்டுள்ளார். 


மேலும் படிக்க | Cyclone Fengal | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ