Cyclone Fengal Highlights: பெங்கால் புயல் புயலின் தாக்கம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இதனால் பல கிராமங்களில் வெள்ளநீர் புகுந்திருப்பதால், அங்கு வசிக்கக்கூடிய மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் முக.. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் தொடர்ந்து பல பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விக்ரமாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்
முதலமைச்சர் நேரில் ஆய்வு
அடுத்த கட்டமாக விழுப்புரம் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் செல்ல இருக்கிறார். அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகளோடு பாதிப்புகள் குறித்து நேரில் கேட்டிருந்து, அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் மழை விவரம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் விருந்தினர் மாளிகையில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
விக்கிரவாண்டி ரயில் நிலையம்
விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் நேற்றிரவு வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்த நிலையில், அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல ரயில்கள் ரத்து
மழை பாதிப்பு காரணமாக விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம், திருக்கோவிலூர்- தண்டரை இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் இன்று (டிச.02) பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தருமபுரி மழை
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டப் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ராஜேந்திரன்.
நாமக்கல் மாவட்டம் மழை
மேலும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் நிலச்சறிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் உருண்டு விழுந்து சிறிய பாறைகளையும் மரங்களையும் நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை நிலச்சரிவு
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடரும் மீட்பு பணி. ராட்சத பாறையை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்.
ரெட் அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளது.
மேலும் படிக்க - “எங்களுக்கு பயமா இருக்கிறது” செந்தில் பாலாஜி ஜாமீன் மீது உச்சநீதிமன்றம் கேள்வி
மேலும் படிக்க - தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ