’செமஸ்டரில் 90% பேர் தோல்வியா?’ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறிப்பிடாமல், 90 விழுக்காடு பேர் தோல்வி என கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் நேரடியாக 14 கல்லூரிகள் மற்றும் 19 உறுப்புக் கல்லூரிகள் என 44 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கெரோனா முடிந்து நேரடி வகுப்பிற்கு திரும்பிய மாணவர்கள், கடந்த மாதம் செமஸ்டர் தேர்வு எழுதியுள்ளனர். அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த முடிவுகளின்படி, மதிப்பெண்கள் எதுவும் தெரிவிக்காமல் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்கள் தோல்வி என பொதுப்படையாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ | முன்விரோதம்: பட்டப்பகலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - ஓட ஓட விரட்டும் சிசிடிவி காட்சி
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கோவை ஆர்.எஸ்.புரம் - வடவள்ளி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாணவர்கள், எழுத்துத் தேர்வை ஆன்லைன் மூலமாகவும், செய்முறைத் தேர்வுகளை நேரடியாகவும் பங்கேற்றிருக்கும் சூழலில், எந்தப் பாடத்தில் எத்தனை மதிப்பெண் என எதுவும் குறிப்பிடாமல் பொதுவாக 90 விழுக்காடு பேர் தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இதற்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ALSO READ | நடிகர் நாகர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் - முஸ்லீம் அமைப்புகள்!
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்குள் துணைவேந்தர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேர்வு முடிவுகளை வாபஸ் பெற்று, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR