முன்விரோதம்: பட்டப்பகலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - ஓட ஓட விரட்டும் சிசிடிவி காட்சி

சென்னையில்  முன்விரோதம் காரணமாக மூன்று பேர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டது, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2021, 07:18 PM IST
முன்விரோதம்: பட்டப்பகலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு -  ஓட ஓட விரட்டும் சிசிடிவி காட்சி

சென்னை, கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன், 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்த இந்தக் கொலையில் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஆகாஷ், கொரட்டூரைச் சேர்ந்த பிரசாந்த், அவரது தம்பி மணி உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ALSO READ | தடுப்பூசி பயத்தால் 'செயற்கை கையை’ செட்டிங் செய்த நபர்

ஜாமீனில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும், இன்று பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு வழக்குக்காக சென்றனர். பின்னர், பாடி திரும்பிய மூன்று பேரும் அங்குள்ள மீன் மார்க்கெட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அரவிந்தனின் தந்தை ரவி, சகோதரர்கள் அப்பன்ராஜ், விவேக் ஆகியோர் ஆகாஷ், பிரசாந்த் மற்றும் மணியை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பலத்த காயமடைந்த மூவரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, அரவிந்தனின் தந்தை மற்றும் சகோதரர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிக்க பகுதியில், பட்டப்பகலில் மூன்று பேரை விரட்டிச் சென்று வெட்டும் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

ALSO READ | மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன் கைது!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News