நடிகர் நாகர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் - முஸ்லீம் அமைப்புகள்!

Wild Dog படத்திற்க்காக நடிகர்  நாகர்ஜுனாவை கைது  செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 05:43 PM IST
நடிகர் நாகர்ஜுனாவை கைது  செய்ய வேண்டும் - முஸ்லீம் அமைப்புகள்! title=

ஆஷிஷோர் சாலமன் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பில் தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான படம் வைல்ட் டாக் (Wild Dog).  தியா மிர்ஸா, சயாமி கெர், அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை மேட்டினி என்டர்டைன்மெண்ட் படம் தயாரித்தது.  இது ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படம், இதியாவில் நடந்த சில பயங்கரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவானது.  இந்நிலையில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவதாக இப்படத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக அதன் மாநில தலைவர் அப்துல் ரஹீம், இப்படத்திற்கு எதிராக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ALSO READ டாப்ஸி நடிக்கும் 'சபாஷ் மிது' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "வைல்ட் டாக் (Wild Dog) திரைப்படத்தை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவத்தோடு, அந்த படத்தை இயக்கியவரையும், அதில் கதாநாயகனாக நடித்தவரையும் கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கூறுகிறோம்.  நாகர்ஜுனா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான வைல்ட் டாக் படம் தெலுங்கு,ஹிந்தி, தமிழ் உட்பட சில மொழிகளில் OTT தளத்தில் வெளியானது.  இப்படத்தை ஆஷிஷோர் சாலமன் இயக்க, எஸ்,நிரஞ்சன் ரெட்டி மற்றும் அவினாஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ளனர்.   இந்த திரைப்படத்திலுள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே உள்ளது.  உதாரணத்திற்கு பள்ளிவாசல், மதரசா போன்ற இடங்களுக்குள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

wild

NETFLIX  என்கிற OTT தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.  இப்படத்தை சைபர் கிரைம் மூலம் இது போன்ற சமூக ஊடகங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.  மேலும் இப்படத்தில் நடித்த நாகார்ஜூனா, இயக்குனர் ஆஷிஷோர் சாலமன், தயாரிப்பாளர்கள் எஸ்,நிரஞ்சன் ரெட்டி மற்றும் அவினாஷ் ரெட்டி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.  மேலும் NETFLIX மற்றும் இன்னும் பிற இதுபோன்ற  OTT தளங்களில் இதுபோன்று மதத்தை இழிவு செய்யும் வகையில் அடிக்கடி படங்கள் வெளியாகிறது.  இதனை அரசும், காவல்துறையும் கண்காணித்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதுடன், அந்த வலைத்தளங்களையும் தடை செய்ய வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறோம்"  என குறிப்பிடப்பட்டிருந்தது.

ALSO READ பிரேமம் இயக்குநரின் அடுத்த படம் தயார்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News